TV

6807407510_87e96e8176_b

தோனியை களத்தில் சக வீரர்கள் புறக்கணித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று முன்தினம் மான்செஸ்டறில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி  46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று (புதன் கிழமை) போட்டி தொடரும் என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று மீண்டும் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஊவர்கள் முடிவில் 239 ரன்கள் எடுத்து இற்திய அணிக்கு 240 ரன்களை இக்காக நிர்ணையித்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியினர் மோசமான பேட்டிங் காரணமாக 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடாந்து 7 வது விக்கெட்டுக்கு ஜோடீ சேர்ந்து ஜடேஜா – தோனி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் வெற்றியை நெருங்கும் தருணத்தில் ஜடேஜா 77 ரன்களிலும், தோனி 50 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இதனால் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியாக இருந்தாலும், பெரும்பாலும் தோனிதான் வீரர்களை வழி நடத்துவார். விராட் கோலியும் முக்கியமான நேரங்களில் தோனியிடம்தான் ஆலோசனை கேட்பார். மேலும் எபோதுமே தோனிதான் கேப்டன் என்று விராட் பேசுவார்.

ஆனால் நேற்றைய போட்டியில் நடந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று போட்டியில் பாண்டியா பந்து வீசும் முன் அவரிடம் சென்று விராட் கோலி ஆலோசனை வழங்கினார். பின்னர் கோலி, ரோஹித், பாண்டியா மூன்று பேரும் சேர்ந்து ஆலோசனை செய்தார்கள். அப்போது அங்கு வந்த தோனியை இந்த மூன்று பேரும் கண்டுகொள்ளவில்லை.

நேற்றைய ஆட்டத்தில் பெரும்பாலும் ரோஹித் சர்மா, கோலி இரண்டு பேர் மட்டும்தான் மாறி மாறி ஆலோசனை செய்தனர். ஆனால் வருங்காலத்துக்கு வழி விடும் தலைவன் என ரசிகர்கள் அவர்களை ஆறுதல் படுத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply