TV

6807407510_87e96e8176_b

மும்பை, 11.07.19:

தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க ரயில்வேக்கு தனி கமாண்டோ படை அமைக்கப்படுகிறது. இந்த படை ‘ரயில்வே பாதுகாப்புக்கான கமாண்டோ படை’ என அழைக்கப்படும். இந்த படை மகாராஷ்டிரா உட்பட இந்தியாவின் மேற்கு பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தும்.  நகர்ப்புற பகுதிகளில் ரயில்வேக்கு உள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க கமாண்டோ படை அமைக்கும்படி 18 ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே போர்டு உத்தரவிட்டுள்ளது.

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களால் ரயில்வேக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால் ரயில்வே பாதுகாப்பு படை அதற்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்.) மற்றும் ரயில்வே பாதுகாப்புக்கான சிறப்பு படையில் (ஆர்.பி.எஸ்.எப்.) இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு கமாண்டோ படை அமைக்கப்பட உள்ளது.

மேலும் இந்த படையில் உள்ள வீரர்களுக்கு  நாட்டில் உள்ள 9 இடங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பிணைக்கைதிகளை விடுவித்தல், கண்ணிவெடிகளை கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.  இந்த கமாண்டோ படைக்கு ரயில்வே பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் தலைவராக இருப்பார். இவர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட், ஹெல்மெட் ஆகியவையும் வழங்கப்படும்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply