TV

6807407510_87e96e8176_b

கோவை, 12.07.19:

கோவை மாவட்டம் அன்னூர்  அவிநாசி சாலையில் கத்தோலிக் சிரியன் வங்கி செயல்பட்டு வருகிறது. அன்னூரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரதான சாலையில் உள்ள இந்த வங்கியில் ஏராளமானோர் வங்கி கணக்கு வைத்துள்ளனர். மேலும் வங்கியை ஒட்டி ஏ.டி.எம் மையமும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வங்கி பணி முடிந்த பின்னர் ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றதை தொடர்ந்து, இன்று அதிகாலை 3.30 மணி அளவில் வங்கியில் இருந்து அபாய ஒலி வந்துள்ளது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அன்னூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் வங்கி ஊழியர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வங்கியின் பின்புற ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு கொள்ளையடிக்க முயன்றது தெரிய வந்தது.  மேலும் துளையிடும் மிசினை கொண்டு பாதுகாப்பு பெட்டக அறையை துளையிட முயன்றபோது அபாய ஒலி எழுப்பியதால் அவர்கள் பாதியிலேயே தப்பி ஓடியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அங்கு பதிவான கைரேகைகளை கொண்டும், கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் தேடி வருகின்றனர். கடந்த மாதம் 26 ம் தேதி இதே முறையில் அன்னூர் அருகே உள்ள ஆந்திரா வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளதால் இந்த இரண்டு சம்பவங்களில் ஒரே ஆட்கள் செய்துள்ளனரா? என்ற கோணத்திலும் அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கி கொள்ளை முயற்சி அதிகாலை நடைபெற்ற தகவல் கிடைத்தும் போலீசார் தாமதமாகவே வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply