TV

6807407510_87e96e8176_b

கோவை, 12.07.19:

கோவை சுக்கிரவார பேட்டை பகுதியில் மாடுகளுக்கு இடையே நடந்த பலத்த சண்டையால் போக்குவரத்து 15 நிமிடம் பாதிக்கப்பட்டது.

கோவைசுக்கிரவார பேட்டை பகுதியில் மாடுகளுக்கு இடையே பலத்த சண்டை ஏற்பட்டது இதனால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இரண்டு மாடுகளும் ஒன்றோடு ஒன்று கடுமையாக முட்டி மோதிக் கொண்டது. இதைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த மாடுகளை துரத்தியும் அங்கிருந்து அந்த மாடுகள் செல்லவில்லை.

மேலும் அங்கிருந்த பொதுமக்கள் அந்த மாடுகளை குச்சியால் அடித்து தண்ணீரை ஊற்றும் பார்த்தனர். இருந்தும் அந்த மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டி கொண்டு சண்டை போட்டது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. இந்த சண்டையால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply