TV

6807407510_87e96e8176_b

கடலூர், 13.07.19:

தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, கடலூர் மாவட்ட கலெக்டர் 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்.

கடலூர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் அன்புச்செல்வன். இவருடைய சொந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள நாடியம் கிராமம். இந்நிலையில், ஒரு விழாவில் பங்கேற்பதற்காக, கலெக்டர் அன்புச்செல்வன் நேற்று தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.

அப்போது, ஊரில் உள்ள 550 ஏக்கர் பரப்பளவுகொண்ட ஏரியை, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் இளைஞர்கள் இணைந்து தூர் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதைக் கேள்விப்பட்ட கலெக்டர், அங்கு சென்று பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் அவர், தூர் வாரும் பணிக்காக தன்னுடைய சார்பில் 25 ஆயிரம் ரூபாயை இளைஞர்களிடம் வழங்கி, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“இளைஞர்கள் தவறான வழியில் செல்லாமல், ஏரியை தூர் வாரி தண்ணீரை சேமிக்க வேண்டும் என சமூக அக்கறையோடு செயல்படுவது பாராட்டத்தக்கது.

இதுபோன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும். இளைஞர்களின் முயற்சி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது” என தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply