TV

6807407510_87e96e8176_b

ஆஸ்திரேலியா, 13.07.19:

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், குமரி வீராங்கனை ஆரோக்கிய அலிஸ் வெள்ளி பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி, ஆஸ்திரேலியாவின் சமோவ் தீவில் உள்ள அபியா நகரில் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், இந்தியா சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்ற ஆரோக்கிய அலிஸ் என்பவர் கலந்து கொண்டார்.

நாகர்கோவில் ஹோலிகிராஸ் பெண்கள் கல்லூரியில் பயிலும் கூடங்குளத்தைச் சேர்ந்த மாணவியான இவர், பெண்களுக்கான 76 கிலோ உடல் எடை பிரிவில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கம் வென்றார்.

இதன் மூலம், குமரி மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்துள்ள மாணவி ஆரோக்கிய அலிஸுக்கும், அவருக்கு பயிற்சியளித்து இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் கு.வினு,
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆகியோருக்கும், அண்ணா விளையாட்டரங்கம் சார்பில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply