TV

6807407510_87e96e8176_b

சென்னை, 20.07.19:

சென்னை அமைந்தகரையில்  3 வயது சிறுமி கடத்தல் தொடர்பான வழக்கில் புகார் அளித்த 8 மணி நேரத்தில் குழந்தையை மீட்டும், கடத்திய 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர்  தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தை அனவிகா கடத்தப்பட்ட புகார் கிடைத்ததும் குழந்தையை மீட்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் சிறுமி வசித்த வீட்டின் அருகே இருந்த சிசிடிவி ஆராய்ந்ததில் சந்தேகத்திற்கிடமாக சிவப்பு நிற கார் சென்றதையடுத்து கார் மற்றும் குழந்தையை கடத்திய வேலைகாரி அம்பிகா மற்றும் குழந்தையின் பெற்றோரிடம் 60 லட்சம் கேட்டு மிரட்டிய வேலைகாரியின் நண்பர் முகம்மது கலிமுல்லா சேட்டை செங்குன்றத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவளம் பகுதியில் குழந்தையுடன் இருந்த வேலைகாரி அம்பிகாவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கோவளம் பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு குழந்தையுடன் இருந்த அம்பிகாவை கைது செய்து குழந்தையை மீட்டதாக தெரிவித்தார்.

மேலும் மூன்பின் அறிமுகம் இல்லாதவர்களை வேலைக்கு சேர்க்கும் போது காவல்துறையில் இணையதளம் மூலம் சம்பந்தபட்ட நபர் குறித்த விவரங்களை குறித்த நற்சான்றிதழை  பெற்று கொள்ளும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூடுதல் ஆணையர்  தெரிவித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply