TV

6807407510_87e96e8176_b

ஒகேனக்கல், 20.07.19:

கர்நாடக அணைகளில் இருந்து திற்ககப்பட்ட 7 ஆயிரத்து 500 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர்  நான்கு நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 17 ஆம் தேதி பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் திறக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, சோம்வார்பேட்டை, மாதபுரா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரத்து 064 கன அடி வீதம் தற்போது நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, குடகு, மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில்  தீவிர மழை பெய்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு அப்பகுதிகளில் கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இன்று காலை நிலவரப்ப வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. காவிரியில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்வதாலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply