TV

6807407510_87e96e8176_b

திண்டுக்கல், 20.07.19:

தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் தொடரின் 4 வது சீசன் நேற்று திண்டுக்கல் அடுத்துள்ள நத்தத்தில் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் கலந்து கொண்டு போட்டியை துவங்கி வைத்தார். இதனையடுத்து அவர் கூறுகையில், இளம் வீரர்களை ஊக்குவிக்கும் தளமாக டிஎன்பிஎல் உள்ளது. இதன் மூலம் ஐபிஎல், ரஞ்சி போன்ற பெரிய போட்டிகளில் ஆடவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. டிஎன்பிஎல் மூலம் அடையாளம் காணப்பட்ட ஜெகதீசன், சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டு சிறப்பாக ஆடினார். நான் உலகக் கோப்பையில் சரிவர ஆடவில்லை. எனினும் வாழ்க்கை நமக்கு பல்வேறு பாடங்களை கற்பிக்கிறது என கூறியுள்ளார்.

இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிய முதல் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய திண்டுக்கல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஜெகதீசன் 17, கேப்டன் அஸ்வின் 37, சதுர்வேதி 21 ரன்களை எடுத்தனர். சென்னை தரப்பில் அலெக்சாண்டர் 3-11, எம்.அஸ்வின் 2-15 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 116 ரன்கள வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை  அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியா அமைந்தது. தொடக்க வீரர்களான கேப்டன் காந்தி (0) ராஜீ (0) கோபிநாத் (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அந்த சரிவிலிருந்து மீளாத  சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆரீப் 16, எம்.அஸ்வின் 16, ஹரிஷ்குமார் 15, சசிதேவ் 13 ரன்களை எடுத்தனர். திண்டுக்கல் தரப்பில் சிலம்பரசன் 4-13, கெளஷிக் 2-14, முகமது 2-21 விக்கெட்டுகளை சாய்த்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply