TV

6807407510_87e96e8176_b

கோவை, 23.07.19:

எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதிய ‘லகுடு’ எனும் நாவலின் வெளியீட்டு நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடைபெற்றது.

லாட்டரி விற்பனையைப் பின்புலமாகக் கொண்டு, எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதியுள்ள நாவல் ‘லகுடு’. தமிழகத்தில், லாட்டரிச் சீட்டு தடை செய்யப்படும் காலத்துக்கு முந்தைய பல்வேறு முக்கிய களங்களை இதில் பதிவு செய்துள்ளார். இதன் வெளியீட்டு நிகழ்ச்சி, கோவை ஆணைக்கட்டி தமிழக – கேரள மாநில எல்லையில் நேற்று முன்தினம் (21ம் தேதி) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன், வழக்கறிஞர் எம்.சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மலைச்சொல் பதிப்பக நிறுவனர் பாலநந்தகுமார், வழக்கறிஞர் கே.எல்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாவலின் முதல் பிரதியை, சமூக செயற்பாட்டாளர் ஆன்மன் வெளியிட, எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் மற்றும் ஒடியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் பேசிய தமிழக காங்கிரஸ் இளைஞரணி செயலாளர் முருகானந்தம், “இன்றைய சூழலில், சூது மிக முக்கியமான விழுமியமாக தாக்கம் செலுத்துகிற சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரும் சாம்ராஜ்ஜியங்களே சூதினால் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இருந்தும், மனிதர்களுக்கு ஏன் சூது, லாட்டரி, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் மீது தீராத மோகம் கொண்டிருக்கிருக்கின்றனர் என்பது கவனிக்க வேண்டியது.

அடிநாதத்தில் மனிதர்களுக்கு இந்த விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தை இந்நாவலின் வழியாக சரவணன் சந்திரன் பதிவு செய்திருக்கிறார்” என்றார். இந்நிகழ்ச்சியில், இயக்குநர் எட்வின், கவிஞர் கடங்கநேரியான், எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி, இளங்கோவன் முத்தையா, ஜார்ஜ் ஆன்டனி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply