TV

6807407510_87e96e8176_b

கோவை, 29.07.19:

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் 22வது தேசிய சாம்பியன்ஷிப் கார் மற்றும் பைக் ரேஸ்கள் நடந்தன. தனியாருக்கு சொந்தமான நிறுவனம் ( ஜே.கே டயர்ஸ்) இந்த போட்டிகளை முன்னிருந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது. கார் மற்றும் பைக் என நான்கு பிரிவுகளால் போட்டிகள் நடைபெற்றன. பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் நடைபெற்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன போட்டிகளில் வாகனங்கள் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

ஜே.கே.டயர்ஸ் சார்பில் கரி மோட்டர். ஸ்பீடுவே மைதானத்தில் தேசிய அளவிலான கார் மற்றும் சுசுகி ஜிக்சர் இருசக்கர வாகன போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் நாட்டின் தலை சிறந்த ஓட்டுனர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். காலை துவங்கி மாலை வரை 4 பிரிவுகளில் கார் பந்தையமும், 2 பிரிவுகளில் இருசக்கர வாகன போட்டிகளும் நடைபெற்றது. எல்.ஜி.பி பார்முலா 4 கார் பந்தையத்தில் அவலான்சி ரேசிங் அணியை சேர்ந்த சென்னை வீரர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர் .

போட்டியில் சீறி பாய்ந்த கார்களைக் பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து போட்டிக்கு நடுவே கார்களைக் வித்தியசமாக வீரர்கள் ஓட்டினர்.இதைக் கண்ட பார்வையாளர்கள் கைகளைக் தட்டி வீரர்களைக் உற்சாக படுத்தினர். இந்தியாவில் இருந்து பல மாநிலங்களில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் , பெண்கள் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. புனேவை சேர்ந்த 12 வயது சிறுவன் திக்சன் இரண்டு பிரிவுகளில் முதல் கோப்பை தட்டிச்சென்றான். அதே போல் பெண்களுக்கு தனியாக நடத்திய போட்டிகளில் கோப்பைகள் வழங்கப்பட்டது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply