TV

6807407510_87e96e8176_b

முன்பதிவு செய்யாமல் பயணம் செல்பவர்களுக்கு உதவும் வகையில், இந்திய ரயில்வே புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

ரயில்களில், முன்பதிவு செய்யாமல் பயணம் செய்வதென்பது மிகவும் கடினமான காரியம். ரயில் புறப்படுவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே ரயில் நிலையம் சென்று, பொதுப் பெட்டியில் இடம்பிடிக்க காத்திருந்து, இருக்கை கிடைக்காமல் நின்றபடியும், கீழே அமர்ந்தும் பயணம் செய்த அனுபவம் பலருக்கு ஏற்பட்டிருக்கும்.

இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் இருக்கையை உறுதி செய்வதற்காக, இந்தியாவில் முதன் முறையாக பயோமெட்ரிக் அடையாள முறையை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ‘பயணிகள் டிக்கெட் வாங்கியதும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் தங்கள் கைரேகையை பதிவு செய்துகொள்ள வேண்டும். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் ஒன்று வழங்கப்படும்.

அந்த டோக்கனில் உள்ள வரிசை எண்ணின்படி பயணிகள் நிறுத்தப்பட்டு, ரயில்வே போலீஸாரின் பரிசோதனைக்கு பின்னர் பயணிகள் பெட்டிக்குள் ஏற்றப்படுவார்கள். முதலில் வந்து டோக்கன் பெறுபவர்களுக்கே இருக்கை கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவாகும் கைரேகையின் மூலம், திருடர்கள் அடையாளம் காணப்படுவார்கள்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ‘வட மாநிலங்களில் செயல்படுத்துவது சாத்தியமானதா..?’ என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply