TV

6807407510_87e96e8176_b

தூத்துக்குடி, 05.08.18:

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் 437வது ஆண்டு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று மாதாவை தரிசித்தனர்.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகம் மட்டுமன்றி கேரளம் உட்பட பல மாநிலங்களில் இருந்தும், இலங்கை உட்பட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்நிலையில் உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தை குமார் ராஜா, உதவி பங்குத்தந்தை கிங்க்ஸ்டன், ஜேசுராஜா, அருட்சகோ மைக்கேல் ஆகியோர் உடனிருந்தனர்.வால்வெள்ளி சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன், நெல்லை எஸ்பி அருண் சக்திகுமார், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக காலை 7.30 மணிக்கு ஆயர் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 8.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு பனிமயமாதா பேராலயத்தில் இருந்து கொடிப்பவனி கொண்டு வரப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதனையடுத்து மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் மாதா திருவுருவம் பொறித்த கொடியை பேராலயம் முன்பாக அமைந்துள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பால், பழம் உள்ளிட்டவைகளை கொடிமரத்தில் படைத்தனர். பேராலயத்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. மேலும் வ.உ.சிதம்பரனார் பழைய துறைமுகத்தில் உள்ள இழுவை கப்பல்கள் மூலம் குடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு சங்கொலி எழுப்பப்பட்டது.

கொடியேற்றத்தை முன்னிட்டு தூத்துக்குடி திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் மாதா புகழ் கீதம் பாடி கொடி பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் கலந்து கொண்டனர்.மாதா திரு உருவம் பொறித்த பொன்னிற கொடியையும், எளியோருக்கும் திருவழிபாட்டுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் உரிய காணிக்கை பொருட்களை பனிமய மாதா ஆல‌யத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.

திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக மதியம் 12 மணிக்கு முதன்மை குரு ரோலிங்டன் தலைமையி்ல் பனிமய மாதாவுக்கு பொன் மகுடம் சூட்டப்படுகிறது.

இந்த கொடியேற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர், மேலும் குருக்கள், துறவியர், அருட்சகோதர, சகோதரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்

திருவிழாவுக்கான பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்க்கும் அதிகமான போலீசார் எஸ்பி அருண் பாலகோபாலன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி நகர டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் ஈடுபடுத்தப்பட்டனர், திருவிழாவின் இறுதி நாளான ஆக.5ம் தேதி (இன்று) தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த பெருவிழாவில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், உலக நாடுகளில் இருந்தும் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply