TV

6807407510_87e96e8176_b

நாமக்கல் அருகே, ஆண்கள் மட்டுமே கொண்டாடிய கோயில் திருவிழாவில், 150க்கும் அதிகமான ஆடுகள் வெட்டி, 3 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து பறிமாறப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் வடுகம் அடுத்த மலையாம்பட்டி கிராமத்தில், பொங்களாயி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கிடா வெட்டி பூஜை நடக்கும்; இந்த விழாவில், ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம்.

இந்த ஆண்டின் விழா கடந்த வாரம் துவங்கியது. கடந்த 4ம் தேதி இரவு 12 மணிக்கு, பொங்களாயி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன் மற்றும் இண்டங்காட்டு கருப்பசாமிக்கு 150க்கும் அதிகமான ஆடுகள் பலியிடப்பட்டு பொங்கல் வைத்து, பூஜை நடந்தது.

இதையடுத்து, பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து, காலை 5 மணி முதல் சமபந்தி விருந்து பறிமாறப்பட்டது. இதில், புதுப்பட்டி, ராசிபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், ஆத்துார், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply