TV

6807407510_87e96e8176_b

கோவை, 08.08.19:

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்ஸ் ரோட்டில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை இந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்தன.

ரயில்வேக்கு சொந்தமான இந்த அலுவலக கட்டடம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு மழை மற்றும் பலத்த காற்று காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. மேலும் காற்றின் வேகத்தில் மேற்கூரைகள் பறந்து விழுந்தன. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை ரயில்வே போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் 5 தீயணைப்பு வாகனங்களில் 50க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓப்பந்த தொழிலாளர்களான காரமடையைச் சேர்ந்த பவளமணி (52) மேட்டுப்பாளயத்தைச் சேர்ந்த இப்ராகிம்(50) மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜூ ஆகிய மூன்று பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட இப்ராஹிம் மற்றும் பவளமணி ஆகிய இருவரும் சிகிச்சையின்போது இறந்தனர். படுகாயமடைந்த வடமாநில தொழிலாளி ராஜூ தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply