TV

6807407510_87e96e8176_b

கோவை, 11.08.19:

கோவையில் இயற்கை அன்னைக்கு திருமேனி அமைத்து, இயற்கையான பொருட்களை கொண்டு அமையபெற்ற இயற்கை கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை, சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் இயற்கை அன்னைக்கு திருமேனி அமைத்து இயற்கையான பொருட்களைக் கொண்டு கருவறை அமைத்து சூரியன் தீபம் சந்திரன் ஆகிய பதிட்டை செய்யப்பட்ட திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் மலையிலிருந்து விழும் அருவி நீர் வழியும் தடாகம், மற்றும் தியானம் செய்வதற்கும் கூரை வளாகம் தெப்பக்குளம் பிறந்தநாள் அறுபது எழுபது எண்பது அகவை விழா நாயகர்களுக்கென அருவி ஊற்று ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதல் கோவிலான இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இயற்கை அறக்கட்டளை தலைவர் தீபம் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இதில், திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம் கால பூஜைகள். நடைபெற்று பின்னர் மூல மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.விழாவில் அப்பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள்,பக்தர்கள்,குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply