TV

6807407510_87e96e8176_b

தமிழகத்தில் கடந்த ஆண்டில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும், நெக்ஸ்ட் தேர்வை தமிழகரசு எதிர்த்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளளார்.

கோவை மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீமோக்காகல் தடுப்பூசி மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை தொடக்கவிழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி வேலுமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். 700க்கும் மேற்பட்ட செவிலியர் பள்ளி மாணவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஊத நிற பலூன்களை பறக்கவிட்டு பேரணியை தொடங்கினர்.

தொடா்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கோவை அரசு மருத்துவமனை மிக சிறப்பாக செயல்படுகிறது. கோவை அரசு மருத்துவமனையில் குறுகிய காலத்தில் 2750 அஞ்சியோகிராம் மற்றும் 150 ஒபன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளோம். இந்தியாவில் முதல் முறையாக 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றரை கிலோவிற்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை கோவையில் துவங்கியுள்ளோம். ஒரு தடுப்பூசி 4 ஆயிரம் ரூபாய். 4 தடுப்பூசிகளுக்கு 16 ஆயிரம் ரூபாய் ஆகும்.

அது முற்றிலும் இலவசமாக போடப்படும். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் பல்வேறு சரத்துகளை எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. நெக்ஸ்ட் தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது இலவச அமரர் ஊர்தி திட்டத்தை தனியாருக்கு வழங்க வாய்ப்பில்லை. தமிழத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும சுகாதார திட்டம் தொடர்பான கேள்விக்கு நர்சிங் மாணவிகள் முறையாக பதிலளிக்காததால் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சுகாதார திட்டம் பற்றி கூட தெரியாமல் மாணவ மாணவிகள் இருப்பதுு வருத்தமடைவதாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் உடனடியாக மெமோ குடுக்க சொல்லி உத்தரவு பிறப்பித்தார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply